அம்மா
உன் பனிக்குடம்
உடைந்ததால்
அழுதேனன்று
பிறந்தது என்
முதல் கண்ணீர் !

அன்றிலிருந்தே
தொடங்கியது
என் கண்ணிரால்
எல்லோர்க்கும்
சந்தோசம்


என் மன கண்கள்
காட்ட மறுகின்றன
நான் உனக்காய்
முதன் முதலில்
அழுத காட்சியை !

உதிரத்தில்
உதித்த சூரியனாய்
உன்னருகில்
படுத்திருந்து
உன் ஒருபகுதி
உதிரத்தில்
உயிர் வளர்த்தேன் !

பசியால்
சுன்டிய உதிரத்தில்
படந்த ஆடையை
என் முகம் அடிக்கடி
அணிந்துகொள்ளும்
அதற்காய்
பால்பசுவிடம்மும்
பாவியானாய் !


எனைசுமக்க
நீ பட்ட
காயங்களை
அடிவயிற்றில்
சேமித்தாயோ
வெள்ளி தழும்புகளாய் !

உன்னை தாயாய்
பெற்றுக்கொள்ள
என்ன பாக்கியம்
செய்தேனோ !

தாயே
உன்னை படைத்த
கடவுளிடம்
நான் சொல்வேன்
என்னை படைத்த
கடவுள் நீயேன்று !

ஹைகூ


   காக்கைகும்
   நரிக்கும் கல்யாணம்
   ஆனந்த கண்ணீர்

ஹைகூ


  உன் எச்சில் 
  மட்டும் இனிக்குதே 
  தேனீ